9 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராட்சத டைனோசரின் எலும்புகூடு கண்டுபிடிப்பு!
9 ஆனி 2021 புதன் 12:17 | பார்வைகள் : 9893
ஆஸ்திரேலியாவில், 9 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராட்சத டைனோசரின் எலும்புகூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
15 ஆண்டுகளுக்கு முன் குயின்ஸ்லாந்தில் மாடு மேய்ப்பவர்கள் சில ராட்சத எலும்புகளை பார்த்துள்ளனர். அவை டைனோசரின் எலும்புகள் என உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பல ஆண்டுகளாக நடந்த அகழ்வாய்வில் ஆஸ்ட்ரலோடைடன் கூப்பெரென்சிஸ் (Australotitan cooperensis) என்றழைக்கப்படும் ராட்சத தாவர உண்ணி வகை டைனோசரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த டைனோசர் 90 அடி நீளமும், 20 அடி உயரமும் இருந்திருக்கக்கூடும் என அனுமானித்துள்ள விஞ்ஞானிகள் இதுவரை உலகளவில் கண்டறியப்பட்டுள்ள மிகப்பெரிய டைனோசர்களில் இதுவும் ஒன்று என்றனர்.