மேகத்தில் மின்சாரம் பாய்ச்சி மழை பெய்ய வைக்க முயலும் விஞ்ஞானிகள்
31 வைகாசி 2021 திங்கள் 13:17 | பார்வைகள் : 9557
மேகங்களில் மின்சாரம் பாய்ச்சி மழை பெய்விக்கச் செய்யும் முயற்சியில் விஞ்ஞானிகள் சிலர் இறங்கியுள்ளனர்.
அது குறித்து CNN செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.
ஐக்கிய அரபுச் சிற்றரசு பாலைவன பூமி. அங்கு ஆண்டுக்கு சுமார் 10 சென்டிமீட்டர் மழைதான் பெய்யும். அதனால் அங்கு அதிக நன்னீர் தேவை.
தீர்வு தேடி மழை பெய்ய வைக்க, உலகெங்கும் உள்ள அறிவியல் திட்டங்களுக்கு ஐக்கிய அரபுச் சிற்றரசு நிதியளித்து வருகிறது.
சிறிய ஆளில்லா வானூர்திகளை அனுப்பி, மேகங்களுக்கு மின்சக்தி ஊட்டும் திட்டத்தை விஞ்ஞானிகள் பரிசீலிக்கின்றனர்.
மேகங்களில் மின்சாரம் பாச்சினால், நீர்த்துளிகள் மழையாகப் பெய்ய வாய்ப்புள்ளது என்பதே அந்த யோசனை.
பிரிட்டனின் University of Reading பல்கலைக்கழக விஞ்ஞானிகள், 2017இல் அந்த யோசனையை முன்மொழிந்தனர்.
விரைவில் துபாய் அருகே, ஆளில்லா வானூர்தி மூலம் சோதனைகள் தொடங்கும் என்று CNN குறிப்பிட்டுள்ளது.