Paristamil Navigation Paristamil advert login

குகையில், பண்டைய மாயன் காலத்து கைச்சுவடுகள் கண்டுபிடிப்பு!

குகையில், பண்டைய மாயன் காலத்து கைச்சுவடுகள் கண்டுபிடிப்பு!

3 வைகாசி 2021 திங்கள் 07:01 | பார்வைகள் : 9944


மெக்சிக்கோவில் உள்ள ஒரு குகையில் கறுப்பு, சிவப்பு நிறங்களில் கைச்சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 
அவை, பண்டைய மாயன் (Mayan)காலத்துக் குழந்தைகளின் கைச்சுவடுகள் என்று கருதப்படுகின்றன.
 
137 கைச்சுவடுகள் 1,200 ஆண்டுகளுக்கு முந்தியவை என்று கூறப்படுகிறது.
 
மெக்சிக்கோ Yucatan தீபகற்பத்தின் வட முனைக்கு அருகே அந்தக் குகை அமைந்துள்ளது.
 
பெண் பிள்ளைகள் பருவமடையும்போது, அவர்களின் கைச்சுவடுகள் பதிப்பது மாயன்களின் வழக்கமாக இருந்திருக்கலாம் என்று தொல்பொருள் ஆய்வாளர் Sergio Grosjean கூறினார்.
 
கறுப்பு நிறத்தில் உள்ள கைச்சுவடுகள் இறப்பையும், சிவப்பு நிறத்தில் உள்ள கைச்சுவடுகள் போர் அல்லது வாழ்க்கையையும் குறிக்கும் என்றார் அவர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்