Paristamil Navigation Paristamil advert login

17,300 ஆண்டுகளுக்கு முன்பு பாறையில் வரையப்பட்ட கங்காரு!

17,300 ஆண்டுகளுக்கு முன்பு பாறையில் வரையப்பட்ட கங்காரு!

27 மாசி 2021 சனி 05:58 | பார்வைகள் : 9796


நாட்டின் மிகவும் பழமையான ராக் ஆர்ட்டை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பாறையில் வரையப்பட்ட கங்காரு, ஒற்றை மனிதன் போன்ற சித்திரங்கள் மற்றும் அதில் படர்ந்திருந்த குளவி கூடு சுமார் 17,300 ஆண்டுகள் பழமையான ஓவியம் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 2 மீட்டரில் (அதாவது 6.5 அடி) வரையப்பட்டுள்ள கங்காரு ஓவியங்கள் மற்றும் பல ஓவியங்கள் கிம்பர்லியில் உள்ள ஒரு பாறை குகை போன்ற தங்குமிடத்தின் மேற்பரப்பில் இருண்ட மல்பெரி வண்ணப்பூச்சில் சித்தரிக்கப்பட்டுள்ளன.

 
தற்போது, மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பிராந்தியத்தில் உள்ள இந்த குகை பகுதி ட்ரைஸ்டேல் நதி தேசிய பூங்காவாக பராமரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இவை பழங்குடி பாறை ஓவியங்களுக்கு பெயர் பெற்றது. இந்த பூங்காவின் பாரம்பரிய உரிமையாளர்களும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் இணைந்து "இயற்கையான" பாறை கலையின் வயதைக் கணக்கிட்டுள்ளனர். அதன் மூலம் இந்த ஓவியங்கள் பாலங்கர்ரா மக்களின் முன்னோர்களால் வரையப்பட்டது என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ரேடியோ கார்பன்-டேட்டிங்கை பயன்படுத்தி பண்டைய மண் குளவி கூடுகளால் அதன் வயது தீர்மானிக்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்புகள் நேச்சர் ஹ்யூமன் பிஹேவியர் இதழில் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.
 
அதோல், குளவி கூடுகளை நம்பியிருக்கும் கார்பன்-டேட்டிங் என்ற ஒரு புதுமையான நுட்பத்தைப் பயன்படுத்தி ஓவியங்களைத் தேட முடிந்தது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மண் குளவிகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக குகையில் வசித்து வருவதால், ஆராய்ச்சிக்குழு ரேடியோகார்பன் டேட்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுமார் 27 கூடுகளின் வயதைக் கண்டறிந்து அதன் மூலம் சுமார் 16-க்கும் மேற்பட்ட ஓவியங்களின் வயதை கண்டறிந்துள்ளனர். பாறையில் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய குளவி கூடுகளின் புஷ்ஃபயர்ஸில் இருந்து கரி மூலக்கூறு கண்டுபிடிக்கப்பட்டது.
 
அதே போல தாவர மற்றும் விலங்கு பொருட்களின் துண்டுகள் இருந்தன. இவை அனைத்தும் தேதியிடக்கூடிய கார்பனைக் கொண்டிருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வரையப்பட்டுள்ள பெரிய கங்காருவுக்கு மேலேயும் கீழேயும் கூடுகள் இருந்ததால், அது எப்போது வரையப்பட்டது என்பதற்காக கால அளவை எங்களால் கணக்கிட முடிந்தது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இது குறித்து, மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் புவியியலாளர் டாக்டர் பிஞ்ச் கூறியதாவது, "ஓவியத்திற்கு அடியில் மூன்று குளவி கூடுகள் மற்றும் அதன் மீது கட்டப்பட்ட மூன்று கூடுகளை நாங்கள் ரேடியோகார்பன் முறையில் தேதியிட்டோம். நம்பிக்கையுடன், ஓவியம் 17,500 முதல் 17,100 ஆண்டுகள் வரை பழமையானது என்பதை தீர்மானிக்க முடிந்தது. பெரும்பாலும் 17,300 ஆண்டுகள் பழமையானது" என்று தெரிவித்துள்ளார்.
 
இது ஆஸ்திரேலியாவின் மிகப் பழமையான ராக் ஆர்ட் ஆகும். 1990 களில் இருந்து இந்த படங்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு தெரிந்திருந்தாலும் மற்றும் பழங்குடியின மக்களால் இது நீண்ட காலமாக அறியப்பட்டிருந்தாலும் டேட்டிங் ராக் ஆர்ட்டின் வரம்புகள் காரணமாக அவற்றின் வயது தெரியாமல் இருந்தது. மேலும் இந்த பாறைகளில் ஒரு பாம்பு, பல்லி போன்ற உயிரினம் மற்றும் கங்காரு போன்ற மார்சுபியல்கள் உள்ளிட்ட சில பழங்கால ஓவியங்களையும் இந்த குழு தேதியிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பழங்கால ஓவியங்களை உருவாக்க அக்கால மனிதர்கள் ஓச்சரைப் பயன்படுத்தியுள்ளனர். இது சிவப்பு நிற மல்பெரி நிறமியை உருவாக்கியது.
 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்