Paristamil Navigation Paristamil advert login

உலகின் ஆகப் பழமையான மது உற்பத்திக் கூடம் கண்டுபிடிப்பு

உலகின் ஆகப் பழமையான மது உற்பத்திக் கூடம் கண்டுபிடிப்பு

20 மாசி 2021 சனி 07:12 | பார்வைகள் : 9389


எகிப்தில் உலகின் ஆகப் பழமையான மது உற்பத்திக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 
அந்த இடம் 5,000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது என்று நம்பப்படுகிறது.
 
எகிப்தின் தென் பகுதியில் உள்ள North Abydos பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்தும் போது தொல்பொருள் ஆய்வாளர்கள் புதைந்துகிடந்த மது உற்பத்திக் கூடத்தைக் கண்டுபிடித்தனர்.
 
அங்கு சுமார் 40 பானைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
 
கிடைத்த பொருள்கள் மன்னர் நர்மர் (Narmer) ஆண்ட காலத்தைக் குறிப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
 
மன்னர் நர்மர் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர், அவர் எகிப்து சாம்ராஜ்யம் உருவாக முக்கிய காரணமானவரும் கூட.
 
ஒரே நேரத்தில் சுமார் 22,400 லிட்டர் மதுவை உற்பத்தி செய்யும் வசதி அந்தக் கூடத்தில் இருந்ததாக ஆய்வாளர்கள் கூறினர்.  

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்