"I am not a robot" இணையத்தில் ஏன் இந்தக் குறிப்பு?
5 கார்த்திகை 2018 திங்கள் 09:08 | பார்வைகள் : 9621
இணையத்தில் நமக்குத் தேவையான தகவல்களைத் தேடும்போது " I am not a robot " எனும் குறிப்பு அவ்வப்போது தோன்றும். அது ஏன் என்று தெரியுமா?
இணையத்தளங்களில் இயந்திரங்கள் மூலமாக ஊடுருவ முயற்சி செய்வதைத் தடுக்கவே அந்தச் சேவை பயன்படுகிறது.
அதை "CAPTCHA" சேவை என்று குறிப்பிடலாம்.
Google, MSN, BING போன்ற இணையத்தளங்களில் பல மில்லியனுக்கு மேற்பட்ட தகவல்கள் இருக்கின்றன, அது நாம் எப்படிக் கணினிச் சுட்டியை(Mouse) நகர்த்துவது என்பது முதற்கொண்டு தெரிந்து வைத்திருக்கும்.
மனிதர்கள் சுட்டியை நகர்த்துவதற்கும், இயந்திரங்கள் நகர்த்துவதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளதாம்.
சிலமுறை மனிதர்களின் சுட்டி அசைவில் சந்தேகம் எழுந்தால் அது இரண்டாவது முறையாக வேறு கேள்வி கேட்க்கும்.
சந்தேகம் எழ எழ கேள்விகள் அதிகரிக்கும்.
"CAPTCHA" ஒலியாகவும், படமாகவும் கேள்விகளைக் கேட்கும்.
இயந்திரங்களுக்குப் புதுமையாக யோசிக்கும் திறன் குறைவு என்பதால் கேள்விகளுக்குத் தகுந்த பதில் தரமுடியாது.
அதனால்தான் "இந்தப் படத்தில் இருக்கும் கார்களை மட்டும் குறி" "ஓவியம் இல்லா சுவர்களைக் குறி " என கேள்விகள் கேட்கப்படும்.
இதுபோன்ற பல கேள்விகள் இருக்கும். அதனால் இயந்திரங்கள் மூலம் "CAPTCHA"வைச் சமாளிப்பது கடினம்.