உலகின் ஆக வேகமான கேமரா கண்டுபிடிப்பு!
29 ஐப்பசி 2018 திங்கள் 12:11 | பார்வைகள் : 9614
பிரபஞ்சத்தின் ஆக வேகமான பொருள் ஒளி. அதனைப் படம்பிடித்துக் காட்டுவது பெரிய சவால்..
பொதுவாக கேமராக்களில் ஒரு நொடிக்கு 30 ஃபிரேம்களை மட்டுமே பிடிக்க முடியும். ஆனால் Caltech எனும் கலிபோர்னியா தொழில்நுட்பப் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் சற்று வித்தியாசமான முயற்சியில் இறங்கி வெற்றி கண்டுள்ளனர்.
அந்த செய்தியை TechCrunch தொழில்நுட்ப செய்தித் தளம் தெரிவித்தது.
அவர்கள் கண்டுபிடித்த கேமராவில் ஒரு நொடிக்கு 10 டிரில்லியன் ஃபிரேம்களைப் பிடித்து உலகின் ஆக வேகமான கேமராவை வடிவமைத்துள்ளனர்.
அதன் மூலம் ஒளி பயணம் செய்யும் வேகத்திலேயே சென்று அதனைப் படம் பிடிக்க முடியும்.
அந்த வேகத்தை இன்னும் நூறு மடங்கு கூட்டவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இதுபோல் பல ஆராய்ச்சிகள் தோல்வியில் முடிந்தன, ஆனால் Caltech விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.
இந்த ஆராய்ச்சியின் மூலம் மேலும் சில கண்டுபிடிப்புகள் உருவாகலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.