Paristamil Navigation Paristamil advert login

மழை சுமந்து வரும் மண் வாசனை எதனால் ஏற்படுகிறது என தெரியுமா?

மழை சுமந்து வரும் மண் வாசனை எதனால் ஏற்படுகிறது என தெரியுமா?

30 புரட்டாசி 2018 ஞாயிறு 12:30 | பார்வைகள் : 13359


ஈரமான மண்ணிலிருந்து கிளம்பும் வாசனை... பலருக்கும் விருப்பமான அந்த வாசனைக்கு அறிவியல் ரீதியான விளக்கம் உண்டு... தெரிந்துகொள்வோமா?
 
1. ஈரமான மண்
 
ஈரமான மண் வாசனை என்று நாம் நினைப்பது நுண்ணுயிர்க் கிருமிகளால் உற்பத்தி செய்யப்படுகிறது.
 
Streptomyces எனும் கிருமி சாதாரணமாகவே மண்ணில் இருக்கும்.
 
வளமான மண்ணில் காணப்படும் அக்கிருமிகள் geosmin எனும் மூலக்கூறுகளை உற்பத்தி செய்கின்றன.
 
மழைத் துளிகள் மண்ணில் விழும்போது அந்த மூலக்கூறுகள் காற்றில் கலப்பதால்தான், நாம் ஈர மண்ணின் வாசனையை நுகர்கிறோம்.
 
2. செடிகள் 
 
செடிகளில் வாசனைக்குக் காரணமான terepeneகளுக்கும் geosmin மூலக்கூறுகளுக்கும் தொடர்பு இருக்கக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
 
அவை இலைகளின் மேல் இருக்கும் முடி போன்ற பாகங்களில் உற்பத்தியாகின்றன.
 
மழைத் துளிகள் இலைகளின் மீது விழும்போது அந்தப் பாகங்கள் சேதமுற்று அவற்றிலிருக்கும் மூலக்கூறுகள் காற்றில் கலக்கின்றன.
 
செடிகளிலிருந்து உதிர்ந்து கீழே கிடக்கும் இலைகளுக்கும் அது பொருந்தும்.
 
3. மின்னல்
 
மழைக்காலங்களில் சட்டென்று மின்னி மறைந்துவிடுகிறது மின்னல்.
 
ஆனால் மழையின்போது கிளம்பும் மண் வாசனையில் மின்னலுக்கும் பங்கு உண்டு.
 
மின்னலால் உற்பத்தியாகும் Ozoneஇன் வாசனை அது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்