Paristamil Navigation Paristamil advert login

கரப்பான்பூச்சிகளைக் கண்டால் ஏன் சிலருக்குப் பயம்?

கரப்பான்பூச்சிகளைக் கண்டால் ஏன் சிலருக்குப் பயம்?

2 புரட்டாசி 2018 ஞாயிறு 03:40 | பார்வைகள் : 9123


வீட்டில் கரப்பான்பூச்சியைக் கண்டால் அலறியடித்து ஓடுவர் சிலர். பெரும்பாலும் குடும்பத்தில் இருக்கும் தைரியசாலி ஒருவர் முன்வந்து அதைத் தூக்கிப் போடுவார்.
 
இவ்வளவு சிறிய பூச்சியைக் கண்டு மனிதர்கள் ஏன் இவ்வளவு நடுங்குகின்றனர்? நிபுணர்கள் சில கருத்துகளைப் பகிர்ந்துந்து கொள்கிறார்கள்...
 
சிறு வயதுப் பழக்கம்
 
பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து பலவற்றைக் கற்றுக் கொள்கின்றனர். அதில் பெற்றோரின் பயத்தையும் அவர்கள் கற்றுக் கொள்கின்றனர். பெரியவர்கள் கரப்பான்களைப் பார்த்து அஞ்சும் போது அவர்களுக்கும் அந்த பயம் உண்டாகிறது.
 
மரபணுக்களில் பயம் பதிவாகிறது
 
ஒருவருக்கு எற்படும் அதிர்ச்சியான சம்பவங்கள், அல்லது பயத்தை ஏற்படுத்திய நிகழ்வுகள் அவருடைய மரபணுக்களில் பதிவாகின்றன. அவை பல தலைமுறையினரிடையே தென்படுவதாக எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்தது. அதனால்கூட ஒருவருக்குக் காரணமில்லாமல் கரப்பான்பூச்சிகள் மீது பயம் வரலாம்.
 
கரப்பான்களில் தோற்றம்
 
கரப்பான்பூச்சிகளின் தோற்றத்தைக் கண்டாலே சிலருக்கு அருவருப்பாக இருக்கும். அவை வாழும் அழுக்கான இடங்கள், அவை ஏற்படுத்தும் நோய்களை நினைத்து அச்சம் வரலாம். சிலருக்கு கரப்பான்பூச்சிகள் வெளியேற்றும் துர்நாற்றத்தை நுகர்ந்தால் வயிற்றைப் புரட்டும்.
 
பயத்திலிருந்து மீளும் வழிகள்
 
கரப்பான்களைக் கண்டு வாழ்நாள் முழுவதும் அச்சப்படத் தேவையில்லை. சில வழிமுறைகளைக் கையாண்டு பார்த்தால் பயம் பறந்து போகும் வாய்ப்பு உண்டு. முதலில் அருவருப்பூட்டும் பூச்சிகளைப் பற்றி மற்றவர்களிடம் பேசுங்கள், படிப்படியாகக் கரப்பான்பூச்சிகளின் நிழற்படங்களைப் பாருங்கள், பின்பு மடிந்த கரப்பான்களைப் பாருங்கள். நாளடைவில் பயம் மெதுவாக நீங்கிவிடும். வீட்டில் கரப்பான் புகுந்தால் அதை அஞ்சாமல் தூக்கி ஏறியலாம். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்