ஓடு இல்லாத ஆமைகள் பற்றி தெரியுமா..??
26 ஆவணி 2018 ஞாயிறு 15:44 | பார்வைகள் : 9800
ஆமைகள் ஒருகாலத்தில் ஓடுகள் இல்லாமல் வாழ்ந்ததாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அண்மையில், கண்டுபிடிக்கப்பட்ட 200 மில்லியன் ஆண்டு பழமை வாய்ந்த உயிரினப் படிவம் அந்தத் தகவலை உறுதிப்படுத்துகிறது. ஆமையின் ஓடு பொதுவாக இருக்கும் பகுதியில் விலா எலும்பு மட்டுமே இருப்பதை, அது காட்டுகிறது.
ஆமை ஒருகாலத்தில் வட்டு போன்ற உடலமைப்பைக் கொண்ட 2 மீட்டர் நீள உயிரினமாக இருந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதற்கு நீண்ட வாலும் இருந்ததாக, அவர்கள் குறிப்பிட்டனர்.
அந்த ஆமைகள் சீனாவின் குய்செள (Guizhou) மாநிலத்தில் வாழ்ந்ததாக Nature சஞ்சிக்கையில் வெளியான கட்டுரையில் ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.