Paristamil Navigation Paristamil advert login

நூறு ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக பூத்திருக்கும் அரிய சீன மரத்தின் பூக்கள்!

நூறு ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக பூத்திருக்கும் அரிய சீன மரத்தின் பூக்கள்!

12 ஆவணி 2018 ஞாயிறு 17:29 | பார்வைகள் : 9894


வேல்ஸ் (Wales) தலைநகர் கார்டிஃப்ஃபில் (Cardiff), உள்ள அரிய சீன மரம் ஒன்றில் சுமார் நூறாண்டுகளுக்குப் பிறகு பூக்கள் பூத்துள்ளன.
 
ராவுத் பார்க்கிலுள்ள (Roath Park) எம்மெனோஒப்டெரிஸ் ஹென்ரி (Emmenopterys henryi) எனும் அந்த மரம் அங்கு நட்டு வைக்கப்பட்டத்திலிருந்து அதில் முதல் முறையாக பூக்கள் பூத்துள்ளன.
 
குளிர் காலத்தைத் தொடர்ந்து அனல்காற்று வீசியதன் காரணமாக அந்த வெள்ளை நிறப் பூக்கள் பூத்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
 
20ஆம் நூற்றாண்டின் முதற்கட்டத்தில் மரம் பூங்காவில் நட்டுவைக்கப்பட்டிக்கும் என்று நம்பப்படுகிறது.
 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்