Paristamil Navigation Paristamil advert login

பாம்பால் மனிதனை எவ்வாறு முழுதாக விழுங்க முடியும்?

பாம்பால் மனிதனை எவ்வாறு முழுதாக விழுங்க முடியும்?

19 ஆனி 2018 செவ்வாய் 15:15 | பார்வைகள் : 9473


7 மீட்டர் நீள மலைப் பாம்பு, இந்தோனேசியப் பெண் ஒருவரைக் கொன்று முழுதாக விழுங்கியுள்ளது.
 
இவ்வாறான சம்பவங்கள் அரிதானவை என்றாலும், இந்தோனேசியாவில் மலைப்பாம்பால் கடந்த ஓராண்டில் நிகழ்ந்த இரண்டாவது மரணம் இது.
 
54 வயது வா தீபா (Wa Tiba), மூனா தீவிலுள்ள தமது காய்கறித் தோட்டத்தைச் சோதனை செய்து கொண்டிருந்த போது மர்மமாகக் காணாமல் போனார்.
 
அவரைத் தேட உள்ளூர் மக்கள் திரண்டனர்.
 
மறுநாள், பெருத்த வயிற்றுடன் படுத்துக் கிடந்த மலைப்பாம்பின் உடலைக் கிழித்துப் பார்த்ததில், வா தீபாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
 
Reticulated python எனப்படும் ஆசியாவைச் சேர்ந்த மலைப்பாம்பின் உடலில் கருப்பு நிறத்தில் தடிப்புகள் காணப்படலாம்.
 
இவ்வகை மலைப்பாம்புகள் 11 மீட்டர் நீளம் வரை வளரக் கூடியவை.
 
இவை அவற்றின் இரையைச் சுற்றி, இறுக்கிக் கொள்ளும் இயல்புடையவை.
 
அதனால் அவற்றின் இரை மூச்சடைத்து, இதயம் துடிப்பது நின்று கொல்லப்படுகின்றன.
 
அதுமட்டுமின்றி, இவ்வகையான மலைப்பாம்புகள் அவற்றின் இரையை முழுதாக விழுங்கும் இயல்புடையவை.
 
அவற்றின் தாடை எளிதில் வளையக்கூடிய தசைநாருடன் இணைவதால், அவற்றால் முழு இரையை விழுங்க முடிகிறது.
 
இருப்பினும், Reticulated python வகை மலைப்பாம்பு மனிதர்களைத் தவிர்ப்பது வழக்கம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
 
மனிதர்களின் தோள்பட்டையை எளிதில் நொறுக்க முடியாது என்பதே அதற்குக் காரணம்.
 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்