Paristamil Navigation Paristamil advert login

விமானிகள் செயலிழந்தால் விமானத்தின் கதி என்னாகும்?

விமானிகள் செயலிழந்தால் விமானத்தின் கதி என்னாகும்?

29 சித்திரை 2018 ஞாயிறு 09:50 | பார்வைகள் : 9033


விமானத்தில் பயணம் செய்யும்போது, நம்மில் பலருக்கு,இந்த அச்சம் ஏற்பட்டிருக்கக்கூடும்.
 
விமானியும் துணை விமானியும் ஏதேனும் ஒரு காரணத்தால் மயங்கிவிட்டாலோ செயலிழந்தாலோ, பயணிகளின் கதி என்னாகும்? யார் விமானத்தைச் செலுத்தி அதைப் பாதுகாப்பாகத் தரையிறக்குவார்?
 
இந்தக் கவலை இருந்தால் அஞ்ச வேண்டாம். அனைத்து விமானங்களிலும் தன்னிச்சையாகத் தரையிறங்கும் முறை (autoland) பொருத்தப்பட்டுள்ளது.
 
அதன் மூலம் விமானம் தானாகவே தரையிறங்கமுடியும். விமானத்தில் இருக்கும் ஒருவருக்கு, தரையில் இருக்கும் கட்டுப்பாட்டு அதிகாரியோடு தொடர்புகொள்ளத் தெரிந்தால் போதும்.
 
அந்த அதிகாரி விமானத்தின் கட்டுப்பாடு அனைத்தையும் எப்படித் தானியக்க முறைக்கு மாற்றுவது என்பதைச் சொல்லித்தருவார்.
 
மிக அருகிலுள்ள ஏதேனும் ஒரு விமான நிலையத்தில், விமானம் தானே தரையிறங்கும்.
 
ஏட்டளவில் இது சாத்தியமே!
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்