5000 வருடங்களுக்கு முன் பசுமாட்டிற்கு சத்திரசிகிச்சை: ஆச்சரியமான ஆதாரங்கள்
22 சித்திரை 2018 ஞாயிறு 08:40 | பார்வைகள் : 9417
சத்திரசிகிச்சை என்பது தற்போதைய காலத்தில் சர்வ சாதாரணம். ஆனால் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சத்திரசிகிச்சை என்ற வார்த்தை கூட இருந்திருக்காது என்றுதான் நினைத்திருபோம்.
ஆனால் தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் பசுமாடு ஒன்றுக்கு கிமு 3000ஆம் ஆண்டில் சர்ஜரி செய்யப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர்.
பிரெஞ்ச் நாட்டின் அகழ்வாராய்ச்சியாளர்களுக்கு சமீபத்தில் ஒரு பசுவின் மண்டை ஓடு கிடைத்தது. இந்த மண்டை ஓட்டை ஆராய்ந்தபோது அதன் தலையில் பிஸ்கட் அளவிற்கு ஒரு ஓட்டை இருந்தது. இது சத்திரசிகிச்சை செய்ததற்கான அடையாளமாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கிடைத்த மனிதனின் மண்டை ஓட்டிலும் இதே அளவில் ஓட்டை இருந்தது என்பதால் அந்த காலத்தில் பசுவுக்கும் மனிதனுக்கு ஒரே முறையில் சத்திரசிகிச்சை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.