இந்தோனேசியாவில் பழமைவாய்ந்த ஓவியம் கண்டுபிடிப்பு!
15 மார்கழி 2019 ஞாயிறு 12:53 | பார்வைகள் : 9331
இந்தோனேசியாவில் உள்ள ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்ட ஓவியம், 44,000 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஓவியம் உலகின் ஆகப் பழமைவாய்ந்ததாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த ஓவியம், சுலவேசி தீவில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
மனிதர்களைப் போன்று உருவம் கொண்ட சிலர் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதைப் போல சிவப்புச் சாயத்தில் ஓவியம் வரையப்பட்டுள்ளது.
படங்கள் வழியாகக் கதை சொல்லும் உத்தியைக் கையாண்ட முதல் ஓவியமும் இதுவே என்று நம்பப்படுகிறது.