Paristamil Navigation Paristamil advert login

கடலில் மூழ்கிய ரோம் ராஜ்ஜியம் கண்டுபிடிப்பு!

 கடலில் மூழ்கிய ரோம் ராஜ்ஜியம் கண்டுபிடிப்பு!

5 புரட்டாசி 2017 செவ்வாய் 05:38 | பார்வைகள் : 9472


துனிசியா நாட்டின் வடக்கிழக்கு கடற்கரையில் கடலில் மூழ்கி இருந்த ரோம் ராஜ்ஜியத்தின் பண்டைய நகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நகரம் ரோம் ராஜ்ஜியத்தின் இரசாயன தயாரிப்பு மற்றும் மீன்கள் உற்பத்தி செய்யும் இடமாக இருந்திருக்க கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
மேலும், கிபி 4 ஆம் நூற்றாண்டிற்கு பின்னர் ஏற்பட்ட சுனாமி போன்ற பேரலையால் இந்த நகரம் கடலில் மூழ்கிப்போய் இருக்க கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
 
சுமார் 20 ஹெக்டர் பரப்பளவில் இந்த நகரம் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், பல சிலைகள், அந்த சிலைகளை உருவாக்க பயன்படுத்தப்பட்ட 100 டாங்குகள் ஆகியவையும் அங்கு இருந்துள்ளது. இந்த சிலைகள் கரன் என்னும் இரசயானத்தால் இருவாக்கப்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்