110 மில்லியன் ஆண்டிற்கு முன் வாழ்ந்த டைனோசர் உடல் கண்டுபிடிப்பு

5 ஆவணி 2017 சனி 13:33 | பார்வைகள் : 14032
110 மில்லியன் ஆண்டிற்கு முன் வாழ்ந்த டைனோசரின் முழுமையான உருவம் கனடா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
கனடா நாட்டின் அல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் பாறைகளுடன் இணைந்து நன்கு பதப்படுத்தப்பட்ட நிலையில் உயிரினம் ஒன்று 2011 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கனடாவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைத்து அதன் உண்மையான உருவத்தை கண்டறியும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் அதன் மீதுள்ள பாறைகள் நீக்கப்பட்டு அதன் முழுமையான உருவம் பெறப்பட்டது. அது போரீலொபெல்டா இனத்தைச் சேர்ந்த டைனோசர் என்பது கண்டறியப்பட்டது. இதற்கு 7 ஆயிரம் மணிநேரம் ஆனதாக அருங்காட்சியகத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் தெரிவித்தனர்.
மேலும் அதன் வடிவம் மிகச்சிறந்த முறையில் பதப்படுத்தப்பட்டுள்ளது. அது 1300 கிலோ எடையும், 18 அடி நீளமும் கொண்டுள்ளது. இந்த டைனோசர் செம்மண் நிறத்தில் இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
அறிவியல் வரலாற்றில் மிகவும் அழகான மற்றும் நன்கு பதப்படுத்தப்பட்ட டைனோசர்களில் இதுவும் ஒன்று. அதனால் இதை டைனோசர்களின் மோனலிசா என அழைப்பதாக அருங்காட்சியகத்தின் விஞ்ஞானி கலேப் புரவுன் தெரிவித்தார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025