தங்கத்தை கக்கும் பேக்டீரியா பற்றி தெரியுமா?
2 ஆவணி 2017 புதன் 13:26 | பார்வைகள் : 15195
Cupriavidus metallidurans என்ற வகை பக்டீரியாவிலிருந்து தங்கத்தை எடுக்க முடியும். இதனை சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆதாரத்துடன் நிறுபித்துள்ளானர். அதை பற்றி விரிவாக காண்போம்.
Cupriavidus metallidurans பேக்டீரியா விஷத்தை தங்கமாக மாற்றுகிறது. கோல்டு குளோரைடில் இருந்து தங்கத்தை உருவாக்குகிறது இந்த பேக்டீரியா.
கோல்ட் குளோரைடை பேக்டீரியாவின் உள்ளே செலுத்தினால், தங்க அயனிகள் விஷமாக மாறுகிறது. இதிலிருந்து தன்னை பாதுகாத்துகொள்ள delftibactin A என்ற புரதத்தை பேக்டீரியா உருவாக்குகிறது.
இதனால் பேக்டீயாவின் மேல்புறத்தில் தங்கம் வெளியேற்றப்படுகிறது என ஆராய்ச்சியில் நிறுபிக்கப்பட்டுள்ளது. இந்த பேக்டீரியாவை கொண்டு தண்ணீரில் கரைந்த தங்கத்தை பிரித்து எடுக்க முடியும்.
இந்த பேக்டீரியா பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan