Paristamil Navigation Paristamil advert login

விசித்திர நாடுகளின் ஒரு பார்வை...!!

விசித்திர நாடுகளின் ஒரு பார்வை...!!

11 ஆடி 2017 செவ்வாய் 12:57 | பார்வைகள் : 9637


உலகின் நாடுகளுக்கு மத்தியில் சில யாருக்கும் தெரியாத, தனக்குள் விசித்திரங்களை அடக்கி வைத்துக்கொண்டுள்ள நாடுகளும் உள்ளதுஅவற்றில் சிலவற்றை காண்போம்.
 
தவோலாரா தீவு:
 
இத்தாலியின் சர்டானியா பிராந்தியத்தின் அருகில் மத்திய தரைகடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு குட்டித்தீவு தவோலாரா. 
 
இத்தாலியால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்ட இந்தத் தீவின் ஒட்டுமொத்த பரப்பளவு ஐந்து சதுர கிமீ, இங்குள்ள மக்களின் எண்ணிக்கை வெறும் 11 தான். 
 
ரெடோண்டா:
 
இங்கிலாந்தின் செளத்ஹாம்ப்டனில் அமைந்திருக்கிறது ரெடோண்டா. புகையிலை தடையில் இருந்து விலகியிருப்பதற்காக தன்னைத்தானே தனி ராஜ்ஜியமாக அறிவித்துக்கொண்டது.
 
புரூணை:
 
போர்னியோத் தீவில் அமைந்துள்ளது புரூணை. 5,765 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. 
 
இந்த தீவில் வாழும் மக்களிடம் எந்தவித வரியும் வசூலிக்கப்படுவதில்லை. புரூணை சுல்தான், உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஸ்வாசிலாந்து:
 
ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது ஸ்வாசிலாந்து. 17,360 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. 
 
இந்த நாட்டின் இயற்கை அழகினால் இது மர்மங்கள் சூழ்ந்த நாடு என்று அழைக்கப்படுகிறது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்