3,000 ஆண்டுகள் பழமையான சூரியக் கோவில் சீனாவில் கண்டுபிடிப்பு!
25 ஆனி 2017 ஞாயிறு 07:30 | பார்வைகள் : 9678
மிகப்பழமையான சூரியக் கோவிலை சீனாவின் வடமேற்கு மாகாணமான யின்ஜியாங் உய்கூரில் கண்டுபிடித்துள்ளதாக தொல்லியல் அறிஞர்கள் அறிவித்துள்ளனர்.
வெண்கல உலோக காலத்தை சேர்ந்த இந்த சூரிய வழிபாட்டு தளம் உள்ளது 1993ம் ஆண்டே கண்டுணரப்பட்டாலும், கடந்த ஆண்டுவரை அகழாய்வுகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது நடைபெற்றுள்ள அகழாய்வுகள், எதிர்பார்த்ததைவிட பெரிய அளவில் சூரியக் கோவில் கட்டுமானத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இதுபோன்ற கட்டுமானங்கள் இதற்கு முன்பாக மேற்கில் உள்ள யுரேசியாவில் மட்டுமே கிடைத்துள்ளதாகவும் தொல்லியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கூழாங்கற்கள், மண் உள்ளிட்டவைகளைக் கொண்டு கல்லால் ஆன மூன்றடுக்கு கட்டுமானமாக இங்கு வாழ்ந்த பழங்குடியினர் சூரியனை வணங்குவதற்காக இதை கண்டியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுமானத்தை உருவாக்குவதற்காக கற்களை நீண்ட தொலைவில் இருந்து பழங்குடியினர் கொண்டுவந்திருக்கலாம் என கருதப்படுகிறது. சூரியனை வழிபடும் முறை என்பது பல்வேறு பழங்கால சமூகங்களில் வழக்கத்தில் இருந்த ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.