உலகில் டைனோஸர்களின் ஆதிக்கம் மேலோங்கியதற்கான காரணம் வெளியானது!
20 ஆனி 2017 செவ்வாய் 14:53 | பார்வைகள் : 9719
ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து ஏற்பட்ட கடும் எரிமலைவெடிப்புகளின் விளைவாகவே, டைனோஸர்கள் அதிக அளவில் உலகில் பரவுவதற்கு ஏதுவாக இருந்திருக்கலாம் என்று கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
டைனோஸர்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ள பல்வேறு விஞ்ஞானிகளின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 200 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் அதிக அளவில் எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டன.
இதன்பின்னர் பாரிய அளவில் உயிரினங்களின அழிவுகள் இடம்பெற்றன.
இந்த காலப்பகுதியில் உலகில் டைனோஸர்களின் ஆதிக்கம் மேலோங்கியதாக கருதப்படுகிறது.
உயிரினங்களின் அழிவால் ஏற்பட்டுள்ள பாரிய வெற்றிடத்தை, டைனோசர்கள் பயன்படுத்திக் கொண்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.