Paristamil Navigation Paristamil advert login

பூமிக்குள் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு!!

பூமிக்குள் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு!!

19 ஆனி 2017 திங்கள் 14:51 | பார்வைகள் : 12860


எத்தியோப்பியாவில் ஹர்லா என்னும் பூமிக்குள் புதைந்த நகரம் தொல்பொருள் நிபுணர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 
 
தோண்டி கண்டுபிடிக்கப்பட்ட இந்த நகரத்தில் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மசூதி ஒன்று உள்ளது. மேலும் அந்த காலத்தில் வாழ்ந்த  இஸ்லாமியர்களின் இடுகாடு மற்றும் நினைவு கற்களும் கண்டெடுக்கப்பட்டது.
 
உடைந்த பாத்திரங்கள், பாறை துகள்கள், மடாகல்கர், மாலதீவுகள், ஏமன் மற்றும் சீனா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மண்பாண்டங்களும் கிடைத்துள்ளன.
 
இந்த கண்டுபிடிப்புகள் மூலம் எத்தியோப்பியாவில் இருந்து தான் இஸ்லாம் மதம் உருவாகி இருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
 
கடந்த கி.பி 10 ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஹர்லா நகரத்துக்கும், இந்தியாவுக்கும் வர்த்தக தொடர்பு இருந்து இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்