Paristamil Navigation Paristamil advert login

ஹேமோசேப்பியன் தோற்றுவாய் தொல்பொருள் கண்டுபிடிப்பு!

ஹேமோசேப்பியன் தோற்றுவாய் தொல்பொருள் கண்டுபிடிப்பு!

13 ஆனி 2017 செவ்வாய் 04:44 | பார்வைகள் : 9840


 ஹோமோசேப்பியன் (Homo Sapiens) எனப்படும் மனித இனமானது சுமார் 100,000 வருடங்களுக்கு முன்னரே விருத்தியடைந்தது என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

 
இதேவேளை இம் மனித இனத்தின் தோற்றத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம் என நம்பப்படும் தொல்பொருள் படிமம் ஒன்று மொராக்கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இப் படிமமானது 300,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.
 
இதனை உறுதி செய்வதற்காக புதிய உத்திகளை கையாளும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் இறங்கியுள்ளனர்.
 
மொராக்கோ நாட்டிலுள்ள Moroccan நகரத்திலிருந்து சுமார் 100 கிலோ மீற்றர்கள் தூரத்தில் காணப்படும் Jebel Irhoud எனும் மலைப் பிரதேசத்தில் குறித்த படிமம் காணப்பட்டுள்ளது.
 
இதேவேளை ஹோமோசேப்பியனுக்கு நெருக்கமான மனித இனம் ஒன்று 500,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம் என எலும்பின் மரபணுவினைக் கொண்டு ஆராய்ச்சி செய்தவர்கள் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்