புதிய இயற்கை எரிபொருளை கண்டுபிடித்த பொறியியலாளர்கள்!
31 வைகாசி 2017 புதன் 16:51 | பார்வைகள் : 9935
உலகில் முதல்முறையாக மீத்தேன் ஹைட்ரேட் எனும் எரிபொருளை சீன பொறியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த வருடம் சீன அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதாவது எரியக்கூடிய பனிக்கட்டி என அழைக்கப்படும் மீத்தேன் ஹைட்ரேட் வாயு புவியியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தது. எனினும் தற்போது தான் பொறியியலாளர்களால் அது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த வாயு பனிக்கட்டி போல் இருப்பதால் எரியும் பனிக்கட்டி (Flammable Ice) என அழைக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இயற்கை எரிபொருளான இவ்வாயு எவ்வாறு தோற்றம் பெறுகின்றது என்பது தொடர்பான விளக்கப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை இவ்வாயுவைக் கண்டறிய அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் தென்கொரிய நாடுகளும் பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்திருந்த நிலையில் சீனா இதில் வெற்றிபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.