மனித உடலின் அற்புதங்கள் பற்றிய ஆச்சரியமான தகவல்கள்!!
6 வைகாசி 2017 சனி 11:08 | பார்வைகள் : 11249
மனித உடல்கள் பற்றி ஆராயப்பட்டதில், பல உண்மைகள் வெளி வந்து கொண்டு தான் இருக்கின்றன. அவற்றில் பல நமக்கு ஆச்சரியத்தையும் ஏன் அதிர்ச்சியையும் கூட ஏற்படுத்தும்.
பொதுவாக நாம் பூரண ஆயுள் என்று கூறுகிறோம். பூரண ஆயுள் என்றால் 100 வருடங்கள் வரை உயிர் வாழ்வது என்று நினைக்கிறோம். ஆனால், பூரண ஆயுள் என்பது 120 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வது.
அதேபோல ஒரு தலைமுறை என்பது 20 ஆண்டுகள் கொண்டது என்று தான் பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். உண்மையில் ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.
மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன. மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது. ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டராகும்.
நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ. பயணம் செய்கிறது. ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.
நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறைகள் சுவாசத்தை உள்ளெடுத்து வெளிச்செலுத்துகிறது. நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.
மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம். கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.
கண் தானத்தில் கருப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன. 900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உட லில் கார்பன் சத்து இருக்கிறது.
உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வோட். மனித உடலில் மிகவும் பலமானவை விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.
இவையெல்லாம் மனித உடலின் அற்புதங்கள் பற்றிய சிறு தொகுப்புதான். மனித உடலின் அற்புதங்களை சொல்லிக்கொண்டே போக ஏராளமான சங்கதிகள் இருக்கின்றன.