3000 ஆண்டுகள் பழமையான சிலையொன்று கண்டுபிடிப்பு!
13 பங்குனி 2017 திங்கள் 13:31 | பார்வைகள் : 15853
உலகையே தன் பக்கம் திரும்பிப்பார்க்கவைக்கும் சிலையொன்று எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எகிப்தின் 19 ஆம் இராஜவம்சத்தைச் சேர்ந்த சுமார் 3000 ஆண்டுகள் பழமையான ராம்சேஸ் 2 என்றழைக்கப்பட்ட மன்னனது மிகப் பழமையான சிலையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிதைவடைந்த நிலையில் உள்ள இச்சிலை எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் தொல்பொருள் ஆய்வாளர்களால் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கெய்ரோவில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களில் மிக முக்கியமான கண்டுபிடிப்பு இது என தெரிவிக்கப்படுகின்றது.
கெய்ரோவின் மட்டாரியா நிலப்பகுதியில் இருந்து எகிப்து மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொல்பொருளியலாளர்களால் தோண்டி எடுக்கப்பட்ட இந்த சிலையின் முக அமைப்பு 26 அடி உயரமானதென தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சிலை ராம்சேஸ் 2 மன்னனுக்கான கோயிலுக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டதால் அவருடையதாக இருக்கலாம் என்று கருதப்படும் போதும் அதற்கான குறியீடுகள் சிலையில் காணப்படவில்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது.
Ozimandias என்றும் அழைக்கப் படும் இந்த ராஜவம்சத்தை சேர்ந்த கோயில் அதன் சிலைகள் என்பன கிரேக்க றோமன் காலப்பகுதியில் அழிக்கப்பட்டதுடன் பல சிலைகள் அலெக்ஸாண்டரியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் கொண்டு செல்லப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. கி.மு 1279-1213 இடைப்பட்ட காலத்தில் 66 வருடங்கள் பண்டைய நுபியா எனப்படும் நவீன சூடான் மற்றும் சிரியாவை ஆட்சி செய்த ராம்சேஸ் 2 என்ற மன்னன் மிகச் சிறந்த மூதாதையன் (great ancestor) என்றும் அழைக்கப்பட்டான்.


























Bons Plans
Annuaire
Scan