அமேசான் காடுகளின் வளர்ச்சிக்கு காரணம் யார் என கண்டுபிடிப்பு!
3 பங்குனி 2017 வெள்ளி 16:32 | பார்வைகள் : 9572
அமேசான் காடுகளில் ஐரோப்பிய காலனி ஏற்படுவதற்கு முன்பே அங்கிருந்த பூர்வீக மக்கள் எண்ணற்ற மரங்களை நட்டுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று வாதிடுகிறது.
மேலும், தற்போது அமேசான் காடுகள் வளர்ந்திருக்கும் தன்மைக்கும் பூர்வீக மக்களே முக்கிய பங்காற்றியுள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.
உணவு அல்லது கட்டட பொருட்களுக்கு பயன்படுத்தப்பட்ட வகைகள் மிகவும் பொதுவான பண்டைய கால குடியேற்றங்களுக்கு அருகில் இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
''இதனால் அமேசான் பகுதி கிட்டத்தட்ட யாரும் தீண்டியதில்லை என்ற சொல்லிவிட முடியாது,'' என்கிறார் நெதர்லாந்தில் உள்ள மருத்துவர் ஹான்ஸ் டெர் ஸ்டீஜ்.
பிரேசில் நிலக்கடலை, முந்திரிக் கொட்டைகள், ரப்பர் என அங்கு உற்பத்தியான 85 வகையான தாவரங்கள் முறையாக வளர்க்கப்படாத தாவரங்களை காட்டிலும் முதிர்ந்த காடுகளில் ஐந்து மடங்கு அதிக வீரியத்துடன் வளரும் என தெரியவந்துள்ளது.
அமேசானில் 1,000க்கும் மேற்பட்ட பகுதிகளிலிருந்து மரங்களின் தன்மை குறித்த தகவல்களை சேகரித்து அதை தொல்பொருள் ஆய்வு தளங்களின் வரைபடத்துடன் ஒப்பீடு செய்து விஞ்ஞானிகள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.