Paristamil Navigation Paristamil advert login

டைனோசர் காலத்தில் பென்குயின்கள் வாழ்ந்ததாக ஆய்வில் தகவல்!

டைனோசர் காலத்தில் பென்குயின்கள் வாழ்ந்ததாக ஆய்வில் தகவல்!

26 மாசி 2017 ஞாயிறு 12:26 | பார்வைகள் : 9217


டைனோசர் காலத்தில் பென்குயின்களும் வாழ்ந்தன என்று, சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
 
அண்டார்க்டிக் கண்டம் மற்றும் நியூஸிலாந்து உள்ளிட்ட தென்துருவ நாடுகளில் வசிக்கும் பென்குயின் பறவைகள் பலரும் அதிகம் விரும்பக்கூடியவை. அவற்றின் தோற்றம், குணாதிசயம் போன்றவற்றை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டு வியப்பார்கள்.
 
அத்தகைய பென்குயின்கள், நம் பூமியில் கடந்த 7 கோடி ஆண்டுகளாக வசித்து வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட காலத்தில்தான் டைனோசர் போன்ற ராட்சத பல்லிகள் பூமியில் ஆதிக்கம் செலுத்திவந்தன. இதே காலத்தில் பென்குயின்களும், ராட்சத வடிவில் தென்துருவப் பகுதிகளில் நடமாடி வந்துள்ளன.
 
இதற்கான ஆதாரம், நியூஸிலாந்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட புதை படிவங்களில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
தோராயமாக, 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக, பூமி மீது விண்கல் மோதியபோது, டைனோசர் விலங்குகளுடன், இந்த ராட்சத பென்குயின்களும் அழிந்து, தற்போது நாம் பார்க்கும் சிறு ரக பென்குயின்கள் தோன்றியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
 
குறிப்பிட்ட டைனோசர் காலத்தில், பூமியில் இருந்த விலங்குகள், பறவைகள் என அனைத்துமே, ராட்சத வடிவில் இருந்திருக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்