Paristamil Navigation Paristamil advert login

மின்னலுக்கு பின் இடி இடிப்பது ஏன்?

மின்னலுக்கு பின் இடி இடிப்பது ஏன்?

25 மாசி 2017 சனி 13:29 | பார்வைகள் : 9375


 மழை பெய்யும் போது அதை ரசிப்பவர்களை விட இடி இடிக்கும் போது அதை கண்டு அஞ்சுபவர்களே அதிகம்.

 
ஆனால் அப்படி மின்னல் நிகழும் போது, இடி ஏற்படுவது ஏன்? என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?
 
மின்னல் ஏற்பட்ட பின் இடி இடிப்பது ஏன்?
 
பூமியில் மழை மற்றும் வெயில் இல்லாமல் திடீரென்று குளிர்ச்சியான காற்று, மேலே எழும்பும். அந்த ஈரமான காற்று மேலே செல்வதற்கு, தனக்கு தேவையான ஈரப்பதத்தை தனக்குள்ளே எடுத்துக் கொள்ளும்.
 
இதனால் அதிகமாக குளிர்ச்சி அடைந்து அந்த நீர்த்துளிகள் வானத்தில் மேகங்களாக உருவாகின்றது.
 
இவ்வாறு கீழ் இருந்து மேலே சென்ற நீர்த்துளிகள் ஏற்கனவே வானில் இருக்கும் மேகத்துடன் உராயும் போது, 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் டிகிரி செண்டி கிரேடு வரை வெப்பம் ஏற்படுகிறது.
 
இந்த வெப்பத்தின் காரணமாக அந்தப் பகுதி விரிவடைந்து பயங்கரமான வெளிச்சம் நிகழும் போது, சத்தம் ஏற்படுகிறது.
 
இவ்வாறான சந்தர்பத்தில் தோன்றும் ஒளியை மின்னல் என்றும், ஒலியை இடி என்றும் நாம் கூறுகின்றோம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்