தங்கம் உலோகங்களை விட ஜொலிப்பதற்கான காரணம் என்ன?
14 மாசி 2017 செவ்வாய் 12:05 | பார்வைகள் : 9623
மற்ற உலோகங்களை விட தங்கம் ஏன் அதிகமாக ஜொலிக்கிறது என்ற சந்தேகம் நம்மில் பலபேருக்கு உள்ளது அல்லவா?
தங்கம் அதிகமாக ஜொலிப்பதற்கு என்ன காரணம்?
உலோகத்தின் மீது பாயும் ஒளியானது, அணுக்கருவின் உள்ளே செல்லாமல், உலோகத்துண்டின் மீது இருக்கும் எலக்ட்ரான்களின் ஒளியை எடுத்துக் கொள்கிறது.
ஆனால் தங்கம் போன்ற உலோகங்களில் மட்டும் அதன் இறுதிப் பாதையில் உள்ள எலக்ட்ரான்கள் அணுவிலிருந்து வெளியேறி உலோகத்துண்டில் அங்கும் இங்கும் சுற்றிய நிலையில, மின்சாரத்தை நன்கு கடத்தும் பொருட்களாக இருக்கும்.
அப்போது உலோகத்துண்டில் படும் ஒளி தூண்டப்பட்டு, எலக்ட்ரான்கள் கிளர்வு நிலையை அடைந்து எலக்ட்ரான்கள் தூண்டப்பட்ட நிலையில் இல்லாமல் இருக்கும்.
இதனால் கூடுதல் ஆற்றலை ஒளியாக உமிழும் எலக்ட்ரான்கள் தமது இயல்பு நிலைக்கு திரும்பி, அங்கும் இங்கும் ஊடுருவதால், எலக்ட்ரான்கள் கிளர்ந்து மறுபடியும் ஒளியை உமிழுச் செய்யும்.
இவ்வாறு எலக்ட்ரான்கள் மீண்டும் அதன் ஒளியை உமிழச் செய்வதால், மற்ற உலோகங்களை விட தங்கம் மட்டும் பளபளப்பாக ஜொலிக்கிறது.