195 மில்லியன் வருடங்கள் பழைமையான வினோத பொருள் கண்டுபிடிப்பு!
4 மாசி 2017 சனி 14:50 | பார்வைகள் : 9391
உலகில் வாழ்ந்ததாகக் கருதப்படும் டைனோசர்களின் படிமங்கள் அவ்வப்போது கண்டெடுக்கப்படுவது வழக்கமாக இருக்கின்றது.
இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட படிமங்கள் தொடர்ச்சியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சுமார் 195 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கருதப்படும் டைனோசர் ஒன்றின் என்பை ஆய்வுக்கு உட்படுத்தியபோது வினோத பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது மிகவும் மென்மையான இழையம் ஒன்று காணப்பட்டுள்ளது.
ரொரன்ரோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்விலேயே இவ் இழையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது முற்றிலும் புரதங்களினால் ஆன ஒரு கட்டமைப்பு என குறித்த ஆய்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த Robert Reisz என்பவர் தெரிவித்துள்ளார்.