Paristamil Navigation Paristamil advert login

நட்சத்திரங்கள் மின்னுவது ஏன் என உங்களுக்கு தெரியுமா?

நட்சத்திரங்கள் மின்னுவது ஏன் என உங்களுக்கு தெரியுமா?

26 தை 2018 வெள்ளி 03:21 | பார்வைகள் : 9641


சிறுவயதில் நாம் வானில் உள்ள நட்சத்திரங்களை எண்ண முயற்சி செய்து தோற்றுப் போயிருப்போம்? அவை தோன்றி தோன்றி மறைந்துவிடும், இது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா?
 
சாதாரணமாக நாம் நெருப்பு புகையின் ஊடே பார்த்தால், எதிர்ப்பக்கத்தில் நடக்கும் காட்சிகள் அசைவது போன்று நமக்குத் தென்படும் அல்லவா? நெருப்புப் புகை உள்ள பகுதியில் காற்று அமளிதுமளியாக இருக்கும்.
 
இதனால் ஒளியானது நெருப்பு புகையின் ஊடே, அமளிதுமளியான காற்றில் கடந்து செல்லும் போது, ஒளியின் பாதை அங்கும் இங்கும் அசையும்.
 
அதனால்தான் நெருப்பின் ஊடே காணும் காட்சி அசைந்து ஆடுவதுபோல நமக்குத் தென்படுகிறது.
 
அதேபோல வானத்தில் காற்று அடுக்குகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டே இருக்கும்.
 
காற்று மண்டலத்துக்கு அப்பால் இருந்து வரும் விண்மீன் ஒளிக்கதிர்கள், அசையும் காற்று மண்டலத்தில் புகுந்து வரும்போது, சற்றே அசைவதுபோலத் தென்படும்.
 
அதுதான் நட்சத்திரங்கள் மின்னுவது போல நமக்குக் காட்சி தருகின்றன.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்