கடவுசீட்டுகள் ஏன் பெரும்பாலும் 4 நிறங்களில் உள்ளன?
11 தை 2018 வியாழன் 09:47 | பார்வைகள் : 9059
நீங்கள் அடுத்த முறை பயணம் செய்யும் போது, உங்களுடன் பயணம் செய்வோரின் கடவுசீட்டுகளை சற்று கவனித்துப் பாருங்கள்.
பெரும்பாலும் அவை நீலம், பச்சை, சிவப்பு நிறங்களிலோ கறுப்பாகவோ இருக்கும். ஆனால் அதற்கான காரணம் என்ன?
கடவுசீட்டுகளின் நிறத்தைத் தீர்மானிப்பதில் எவ்விதமான அனைத்துலக நிபந்தனையும் இல்லாவிட்டாலும் அவற்றை வடிவமைக்கும் போது நாடுகள் சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றன.
முஸ்லிம் நாடுகள், இஸ்லாத்தில் முக்கிய இடம்பெறும் பச்சை நிறத்தில் கடப்பிதழ்களைத் தயாரிக்கும்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கடவுசீட்டுகள் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர விரும்பும் நாடான துருக்கியின் கடவுசீட்டுகளும் கருஞ்சிவப்பாக இருக்கும்.
அமெரிக்கா, தனது தேசியக் கொடியிலுள்ள நீல நிறத்தைக் குறிக்கும் வகையில் கடவுசீட்டுகள் வடிவமைத்துள்ளது.
தென்னமெரிக்க நாடுகளான பிரேசில், அர்ஜெண்டினா போன்றவையும் நீல நிறக் கடவுசீட்டுகளை கொண்டுள்ளன.
ஆனால் ஏன் பெரும்பாலான நாடுகள் கறுப்புக் கடவுசீட்டுகளை கொண்டுள்ளன என்பதற்கான காரணம் மிக எளிது.
உலகெங்கும் பயணம் செய்யும் கடவுசீட்டுகளில் அழுக்குப் படியும்போது அது தெரியாமல் இருக்க அவை கருமையாக இருக்கின்றன.
அதனுடன் தங்க நிறத்தில் இருக்கும் சின்னங்கள் எடுப்பாகத் தெரியும் என்பதும் ஒரு முக்கியக் காரணம்.