Paristamil Navigation Paristamil advert login

40,000 ஆண்டு பழமையான சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்மம்! பின்னணி என்ன?

40,000 ஆண்டு பழமையான சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்மம்! பின்னணி என்ன?

30 மார்கழி 2017 சனி 11:43 | பார்வைகள் : 8807


ஜெர்மனியில் 1939 ஆம் ஆண்டு குகை ஒன்று தோண்டப்பட்டது. அப்போது அதில் மம்மூத் யானைகளின் தந்தங்கள் மற்றும் பல பழங்காலத்து பொருட்கள் கையகப்படுத்தப்பட்டன. இது குறித்து ஆராய்ச்சிகள் நடந்த வண்ணமே உள்ளன.
 
இந்நிலையில், தோண்டி எடுக்கப்பட்ட பொருட்களில் சிங்க மனிதன் உருவம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. இது 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்டிருக்களாம் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
 
வரலாற்றுக்கு முந்தைய பழங்காலத்தில் வாழ்ந்த மனிதர்களால் இந்த சிலை செதுக்கப்பட்டிருக்களாம் என தெரிகிறது. நிற்கும் நிலையில் சிங்க மனிதனின் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் உருவம் மனிதனை போன்றும் தலை சிங்கத்தை போன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
 
அந்த காலகட்டத்தில் இது போன்ற சிலை ஒன்றை செதுக்க சுமார் 400 மணி நேரம் பிடித்திருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல், ஆதிமனிதன் கதைகளில் இருந்து இது உருவாகியிருக்களாம் என தெரிகிறது. ஆனால், இதன் பின்னணியில் ஓர் மர்மமும் உள்ளது.
 
அது என்னவெனில் மிகவும் அறிதான சிலையாக கருதப்படும் இது சிதைக்கப்பட்டு பின் புதைக்கப்பட்டுள்ளது. பழங்காலத்து மனிதர்கள் இதை அப்படியே புதைக்காமல் எதற்காக சிதைத்து பின்னர் புதைத்தனர் என்ற கேள்வியின் பின்னணியில் உள்ள மர்மத்திற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்