103 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட அவுஸ்திரேலியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பல்!
21 மார்கழி 2017 வியாழன் 10:30 | பார்வைகள் : 9543
அவுஸ்திரேலியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் 103 ஆண்டுகளுக்கு பின் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1914இல் 35 ஆஸ்திரேலிய, பிரிட்டிஷ் பணியாளர்களுடன் காணாமல் போன அந்தக் கப்பல் பாப்புவா நியூகினியின் டியூக் அஃப் யார்க் தீவுகளுக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்டது.
800 டன் எடைகொண்ட அந்த நீர்மூழ்கிக் கப்பல் மாயமானது, அவுஸ்திரேலிய ராணுவ வரலாற்றின் ஆகப் பெரிய மர்மங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது.
12 தேடல் முயற்சிகள் பயனளிக்கவில்லை. 13ஆவது முயற்சியில் கடலடி ஆளில்லா ஊர்தியைப் பயன்படுத்தி நீர்மூழ்கி இருந்த இடத்தைக் கண்டுபிடித்துள்ளனர் தேடல் குழுவினர்.
கப்பலில் சிக்கிக் காணாமல் போன பணியாளர்களின் சந்ததிகளைத் தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், பாப்புவா நியூகினியின் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, நீர்மூழ்கிக் கப்பல் கண்டெடுக்கப்பட்ட இடத்தை நினைவிடமாக அறிவிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அது கூறியது.