Paristamil Navigation Paristamil advert login

நீண்ட நாள் வாழ ஆய்வில் கண்டுபிடித்த புதிய தகவல்

நீண்ட நாள் வாழ ஆய்வில் கண்டுபிடித்த புதிய தகவல்

5 மார்கழி 2017 செவ்வாய் 10:18 | பார்வைகள் : 14806


கண்புரை ஆபரே‌ஷன் செய்தால் நீண்ட நாள் உயிர்வாழ முடியும் என்ற தகவல் சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 
‘கேட்ராக்ட்’ எனப்படும் கண்புரை நோய் மனிதர்களின் பார்வையை பறித்து அவர்களின் வாழ்வை இருள்மயமாக்குகிறது.
 
அறுவை சிகிச்சை மூலம் கண்புரை அகற்றப்பட்டு இழந்த பார்வை திரும்ப கிடைக்கிறது.
 
அவ்வாறு கண் பார்வை கிடைக்க பெற்றவர்கள் நீண்ட நாள் உயிர்வாழ முடியும் என்ற தகவல் சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டனர்.
 
அவர்களில் 74,044 பெண்கள் அடங்குவர். அவர்கள் அனைவரும் கண் புரை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் 20 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
 
அவர்களில் 41,735 பெண்கள் 60 சதவீத மரண அபாயத்தில் இருந்து மீண்டனர். அவர்களுக்கு முழுமையான கண்பார்வை கிடைத்தது.
 
கண்புரை ஆபரேசனுக்கு முன்பு அவர்களில் பலர் மாரடைப்பு, அல்சர், நுரையீரல் நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டனர். கண்புரை ஆபரேசன் செய்த பிறகு அவை குணமடைந்து ஆரோக்கியமான உடல் நிலையை அடைந்தனர்.
 
பொதுவாக கண்புரை ஆபரேசன் செய்தவர்களுக்கு பார்வை தெளிவாக தெரிவதால் விபத்துகள் மூலம் ஏற்படும் மரணமும் தவிர்க்கப்படுகிறது. எனவே கண்புரை ஆபரே‌ஷன் செய்தவர்கள் நீண்டநாள் வாழ முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

11 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்