உலகையே அதிர செய்த ராட்சத சிலந்தி கோட்டை! விஞ்ஞானிகள் அதிர்ச்சி!
10 கார்த்திகை 2017 வெள்ளி 01:34 | பார்வைகள் : 13533
இஸ்ரேலில் நீண்ட தாடை கொண்ட புதிய வகை சிலந்தி பூச்சிகள் ஆயிரக்கணக்கில் இருப்பது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இஸ்ரேல் ஜெருசலேம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் உள்ள சிற்றோடை கரையில் புதிய வகையிலான சிலந்திகள் ஆயிரக்கணக்கில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை ஹீப்ரு பல்கலைக்கழக மாணவர் இகோர் அர்மிகச் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
இந்த சிலந்தி பூச்சிகள் வழக்கமான சிலந்திகளை விட அளவில் சிறியது. இந்த சிலந்தி பூச்சிகள் ஒரே இடத்தில் குவிந்து இருப்பது வழக்கத்திற்கு மாறான ஒன்றாகும். சிற்றோடையின் அருகில் உள்ள மரம், செடி, கொடி, என அனைத்திலும் பஞ்சுப் பொதியை போன்று காணப்படுகிறது.
எனவே இந்த அறிய வகை சிலந்தி பூச்சிகள் பற்றி ஆராய்ச்சி செய்ய இஸ்ரேல் அரசு ஆராய்ச்சி மையத்தை நிறுவ முடிவு செய்துள்ளது.


























Bons Plans
Annuaire
Scan