மூன்று இதயங்கள் கொண்ட மீன் பற்றி தெரியுமா?
7 ஐப்பசி 2017 சனி 15:08 | பார்வைகள் : 9593
கனவாய் (Cuttlefish) எனப்படும் மீன் இனத்திற்கு தான் அந்த சிறப்பு. கடல் விலங்குகளில் இது ராஜா எனவும் கருதப்படுகிறது. இந்த மீன், ஸ்குவிட் மற்றும் ஆக்டோபஸ் குடும்பத்தை சார்ந்ததாகும். இதனை செப்பலோபாட்ஸ் எனவும் அழைக்கின்றனர்.
மேலும் கனவாய் மீனுக்கு மிகப் பெரிய இதயம் உள்ளது, உண்மையில் இதற்கு ஒரு இதயம் அல்ல மூன்று இதயங்கள். இரண்டு இதயங்கள் செவுள்களுக்கு (Gills) ரத்தத்தை பம்ப் செய்யவும், மூன்றாவது இதயம் பிற உறுப்புகளுக்கு (Organs) பம்ப் செய்யவும் பயன்படுத்துகிறது.
இந்த மீனின் அங்கம் தட்டையாக இருப்பதால் கடலில் வாழ்வதற்கு தோதாக உள்ளது. இவை மொலஸ்க்ஸ் மற்றும் சிறிய மீன்களை வேட்டையாடக்கூடியது. கனவாய் மீன்கள் பிற இனத்தின் மீன்களிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள தன் நிறத்தை பின்புல நிறத்திற்கு ஏற்ப மாற்றும் இயல்புடையது.
நீல நிற இரத்தம்
கனவாய் மீனின் ரத்தத்தில் காப்பர் அதிகமாக இருப்பதால் ரத்தத்தின் நிறம் பச்சையும் நீலமும் கலந்த நிறமாக தோன்றும். இதன் காரணமாகவே இதை ராஜா மீன் என்கின்றனர்.
தன் நிறமிப் பையை சரிப்படுத்துவதன் மூலம் தன் நிறத்தை இதனால் மாற்ற முடிகிறது. நிறமி பைகள் சிறியவை, ஆனாலும் பல வண்ணங்களை கொண்டு காணப்படுகிறது. எதிரி மீன்கள் தன்னை தாக்கும்போது கருப்பு நிற திரவத்தை வெளியிட்டு தாக்கும் இனத்திடம் இருந்து தற்காலிகமாக தப்பிக்கும் தந்திரம் உடையது இந்த கனவாய் மீன்கள்.