இரவிலும் சூரியன் உதிக்கும் 6 நாடுகள்!
29 புரட்டாசி 2017 வெள்ளி 04:16 | பார்வைகள் : 10693
உலகின் சில நாடுகளில் சூரியன் மறையாமல் 24 நான்கு மணி நேரமும் உதித்து கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியல்கள் இதோ,
நார்வே
நார்வே ஆர்டிக் சர்கிளில் அமைந்திருக்கிறது. இந்த நாட்டில் நடு இரவிலும் சூரியன் உதிக்கும். இதை காணவே பல்வேறு சுற்றுலாப்பயணிகள் வருகை தருகிறார்கள்.
இந்நாட்டின் மற்றொரு சுவாரஸ்யம் என்னவெனில், சுமார் 100 ஆண்டுகள் முழுவதுமே சூரியன் தெரியாமல் இருட்டாகவே இருந்துள்ளதாம்.
அலஸ்கா
பனிக்கட்டிகள் நிறைந்த அலஸ்கா நாட்டில் மே முதல் ஜூலை வரை சுமார் 1440 மணி நேரங்கள் பகலாக இருக்கும். இந்த மாதங்களில் சூரியன் மறையாது.
ஐஸ்லாந்து
ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய தீவான ஐஸ்லாந்து நாட்டில் மே முதல் திகதியில் இருந்து ஜூலை கடைசி திகதி வரை சூரியன் தெரிந்து கொண்டேயிருக்கும். கோடைகாலங்களில் நடு இரவில் சூரியன் மறையும் மீண்டும் அதிகாலை மூன்று மணிக்கு சூரியன் உதிக்கும்.
கனடா
அதிக நாட்கள் ஐஸ்கட்டி உறைந்திருக்கும் நாடுகளின் பட்டியலில் கனடா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்நாட்டில் கோடைக்காலங்களில் 50 நாட்கள் சூரியன் மறையாமல் இருக்கும்.
ஸ்வீடன்
ஸ்வீடன் நாட்டில் குளிர் சற்று குறைவாகவே இருக்கும். இந்நாட்டில் நடு இரவில் சூரியன் மறைந்து அதிகாலை 4.30 மணிக்கே சூரியன் உதிக்கும். இந்நிகழ்வு மே முதல் ஆகஸ்ட் மாதங்கள் வரை மட்டுமே நீடிக்கும்.
ஃபின்லாந்து
ஃபின்லாந்து நாடு ஆயிரம் ஏரிகளுடன் இயற்கை சூழல் நிரம்பி காணப்படும் இடம். இங்கே கோடைக்கால ஆரம்பத்தில் சூரியன் உதிக்கிறது. அதன்பின் 73 நாட்கள் கழித்தே மறைகிறது. ஆனால் தொடர்ந்து 73 நாட்களும் சூரியனை நாம் பார்க்க முடியும்.