Paristamil Navigation Paristamil advert login

உலகின் மிக பழைய பூஜ்ஜியக் குறியீடு பற்றி தெரியுமா?

உலகின் மிக பழைய பூஜ்ஜியக் குறியீடு பற்றி தெரியுமா?

23 புரட்டாசி 2017 சனி 05:00 | பார்வைகள் : 9099


இந்தியாவின் பழமையான சுவடித் தொகுப்பு ஒன்றில் இருக்கும் பூஜ்ஜியக் குறியீடுதான் இதுவரை பதிவு செய்யப்பட்ட பூஜ்ஜியக் குறியீடுகளிலேயே மிகப் பழமையைனது என்று அந்த ஓலைச் சுவடியைக் கொண்டு செய்யப்பட்ட கார்பன் டேட்டிங் ஆய்வு காட்டுகிறது.
 
பக்சாலி சுவடி என்று அழைக்கப்படும் அந்த சுவடி முந்தைய ஆய்வுகளில் 8 அல்லது 12-வது நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த புதிய ஆய்வின் முடிவு இந்தச் சுவடி மூன்றாவது அல்லது நான்காவது நூற்றாண்டைச் சேர்ந்த சுவடியாக இருக்கலாம் என்று கூறுகிறது.
 
இந்தியாவின் குவாலியரில் உள்ள ஒரு கோவிலில் உள்ள பூஜ்யக் குறியீடுதான் பழமையானதாக கருதப்பட்டது. ஆனால், இந்த கார்பன் டேட்டிங் ஆய்வு ஆக்ஸ்போர்டில் இப்போது உள்ள சுவடியில் பதியப்பட்டிருக்கும் பூஜ்யம் குவாலியர் கோயிலில் உள்ள பூஜ்யத்தைவிட பழமையானது என்பதை நிறுவி இருக்கிறது.
 
"இந்த புதிய கண்டுபிடிப்பு கணிதவரலாற்றில் அதிமுக்கியமானது" என்கிறார் போட்லியான் நூலகத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் ஓவண்டன்.
 
புள்ளி போன்ற ஒரு வடிவத்திலிருந்து பரிணமித்த பூஜ்யக் குறியீடு, பக்சாலி சுவடி நெடுகிலும் பல இடங்களில் காணக்கிடைக்கிறது.
 
எண் முறையில் அளவை குறிக்க பயன்பட்ட இந்தப் புள்ளியின் தோற்றம் மெல்ல பரிணமித்து இறுதியாக அதன் மையத்தில் வெற்றிடம் தோன்றியது என்று ரிச்சர்ட் ஓவண்டன் தெரிவித்தார்.
 
"பிர்ச் மரபட்டையின் எழுபது ஏடுகளில், மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களைச் சேர்ந்த பொருள்களைக் கொண்டு இயற்றப்பட்ட இந்த சுவடியின் காலத்தை கணிப்பது மிகக் கடினமான ஒன்றாக ஆய்வாளர்களுக்கு இருந்தது" என்கிறது போட்லியான் நூலகம்.
 
இப்போது பாகிஸ்தானில் உள்ள பக்சாலி கிராமத்தில் இந்த சுவடி 1881-ம் ஆண்டு ஒரு விவசாயியால் கண்டெடுக்கப்பட்டது. இந்தியவியலாளர் ருடால்ஃப் ஹொன்லே கைக்குச் சென்ற இந்தச்சுவடித் தொகுப்பை அவர் 1902ம் ஆண்டு போட்லியான் நூலகத்துக்கு அளித்தார்.
 
இது குறித்து பேசிய ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மார்கஸ் டு செளட்டாய், "பூஜ்யம் உருவாக்கப்பட்டது கணிதத்தில் மிகமுக்கியமான கண்டுபிடிப்பு என்றார்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்