உலகின் பண்டைய கோடாரி கண்டுபிடிப்பு
13 வைகாசி 2016 வெள்ளி 00:04 | பார்வைகள் : 14620
இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் மிகப் பண்டைய கோடாரி பாகங்கள் கைப்பிடியுடன் அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கோடாரி மேற்கு அவுஸ்ரேலியாவில் 1990களில் கண்டுபிடிக்கப்பட்டபோதும் அதன் கார்பன் காலக்கணிப்பில் தவறு நிகழ்ந்ததால் அதன் காலம் தவறாக கணிக்கப்பட்டிருந்தது. எனினும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில் இந்த பாகங்கள் 44,000 மற்றும் 49,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்துடையது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடினமான கற்களைக் கொண்டே இந்த கோடாரி கத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
இது அவுஸ்திரேலியாவுக்கு மனிதன் ஆரம்பத்தில் குடியேறிய நெருங்கிய காலத்துடையதாகும். உலகில் இதற்கு முன்னர் கண்டுபிக்கப்பட்ட கோடாரிப் பாகங்களை விடவும் 10,000 ஆண்டு பண்டையதாகும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்மூலம் முதல்முறை கோடாரி எப்போது, எங்கே உருவாக்கப்பட்டது என்பதை அறிய இந்த கண்டுபிடிப்பு உதவும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.


























Bons Plans
Annuaire
Scan