Paristamil Navigation Paristamil advert login

துபாயில் புர்ஜ் கலிபாவை மிஞ்சும் உயரமான கட்டடம்

துபாயில் புர்ஜ் கலிபாவை மிஞ்சும் உயரமான கட்டடம்

18 சித்திரை 2016 திங்கள் 00:35 | பார்வைகள் : 10812


 உலகிலேயே மிக உயரமான கட்டடமான துபாயில் உள்ள புர்ஜ் கலிபாவை விட அதிக உயரத்தில் புதிய கட்டடம் ஒன்று துபாயில் அமைக்கப்படவுள்ளது.

 
துபாய் கீரிக்கில் அமையவுள்ள இந்த டவர் ஆறு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்பட பல்வேறு வசதிகளை கொண்டதாக உருவாக்கப்படவுள்ளது,
 
உலகிலேயே மிக உயரமான கட்டடமாக புர்ஜ் காலிபா (Burj Khalifa) 828 மீட்டர் உயரம் உடையதாகும். இதனை விட உயரமான கட்டடமாக இந்த டவர் இருக்கும் என்றும், இக்கட்டிடத்தின் வடிவமைப்பு சுவிஸ் மற்றும் ஸ்பெயின் கட்டிகலையையொட்டி அமைக்கப்படவுள்ளதாகவும், ஈமார் ப்ராப்பர்டிஸ் (Emaar Properties ) நிறுவன சேர்மன் முகமது அல் அப்பார் தெரிவித்துள்ளார்.
 
ஒரு பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்படவுள்ள இந்த டவர், Dubai hosts Expo 2020 ஆரம்பிப்பதற்கு முன்பாக உருவாக்கப்பட்டு விடும் என்று முகமது அல் அப்பர் கூறியுள்ளார்.
 
துல்லியமாக எவ்வள உயரம் என்பது குறித்து ஈமார் ப்ராப்பர்டிஸ் நிறுவனம் தெரிவிக்கவில்லை. இந்த ஆண்டு ஜுன் அல்லது ஜூலையில் கட்டடப்பணிகள் துவங்கும் என்று தெரிகிறது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்