பகலை விட இரவில் அதிக வெப்பம் ஏற்பட காரணம் என்ன?
1 சித்திரை 2016 வெள்ளி 06:54 | பார்வைகள் : 10346
பொதுவாக இரவு நேரம் என்பது இதமான, குளிரான காலநிலையையே கொண்டிருக்கும் என்பது அனைவரதும் கருத்து. எனினும் தற்பொழுது அந்த நிலைமை முற்றாக மாற்றமடைந்தே உள்ளன.
இதமான, குளிர்ச்சியான இரவுகள் கடந்த 50 ஆண்டுகளில் பகலை விட சூடாக மாறிவருகிறது. அதுவும் மிக வேகமாகவே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக நோர்வே நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் தற்பொழுது அதன் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். பூமியை சூழ்ந்திருக்கும் வளிமண்டலம் பல அடுக்குகளை கொண்டது. அதில் பூமியின் மேல்தளத்தை சூழ்ந்திருக்கும் வளிமண்டலமானது பகலில் சில கிலோ மீட்டர் உயரத்திற்கு உள்ளது. ஆனால் இரவு நேரத்தில் இது சில நூறு மீட்டர்களாக சுருங்கிவிடுகிறது. எனவே இரவு நேரத்தில் வெளியாகும் கார்பன் டை ஒக்சைடு காரணமாக காற்று வேகமாக சூடாகிவிடுகிறது.
இது தான் இரவின் வெப்பநிலை வேகமாக உயர்ந்து வருவதற்கான காரணம் என்பதை நோர்வே விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கார்பன் டை ஒக்சைடு வெளிப்பாட்டை குறைக்காமல் பூமியின் வெப்பநிலை உயர்வை கட்டுப்படுத்தவோ குறைக்கவோ முடியாது என ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.