Paristamil Navigation Paristamil advert login

பிரிட்டனின் நேர மாற்ற நடைமுறை

பிரிட்டனின் நேர மாற்ற நடைமுறை

28 பங்குனி 2016 திங்கள் 15:53 | பார்வைகள் : 10804


 வசந்தகாலத்தில் ஒரு மணி நேரம் முன்னோக்கியும், இலையுதிர் காலத்தில் ஒரு மணி நேரம் பின்னோக்கியும் கடிகாரத்தில் நேரம் மாற்றப்படும்.

 
வசந்தகாலம் ஆரம்பிக்கும் மார்ச் மாதத்தின் கடைசி ஞாயிரன்று, நேர மாற்றம் மேற்கொள்ளப்படும்.
 
இலையுதிர் காலமான ஒக்டோபர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை, மீண்டும் ஒரு மணி நேரம் பின்னோக்கி மாற்றப்படும்.
 
பிரிட்டனில் நேரத்தில் இவ்வாறு மாற்றம் செய்யும் நடைமுறை நடைமுறைக்கு வந்து 100 வருடங்கள் நிறைவடைகின்றன.
 
1916 ஆம் ஆண்டு கோடைகால சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, கடிகாரத்தில் நேரத்தை மாற்றம் செய்வது தொடர்பில் மக்களுக்கு தெளிவான விளக்கம் இருக்கவில்லை.
 
இதனால் கடிகாரத்தில் எவ்வாறு நேரத்தை மாற்றுவது என்பது தொடர்பில் அரசு சுவரொட்டிகள் மூலம் விளக்கமளித்து வந்தது.
 
1941 ஆம் ஆண்டு பிரிட்டன் நேரத்தில் மற்றுமொரு மாற்றம் கொண்டுவரப்பட்டது.
 
அதாவது ஜிஎம்டி நேரத்திலிருந்து கடிகாரம் இரண்டு மணி நேரம் முன்னோக்கி மாற்றப்பட்டது. அது இரண்டாம் உலகப்போரின் மத்திய காலப்பகுதியாகும்.
 
இதன் மூலம் எரிசக்தியை சேமிக்கலாம் என்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், 1947 ஆம் ஆண்டு மீண்டும் இரண்டு மணி நேரம் பின்னோக்கி மாற்றப்பட்டது.
 
இதேபோன்றதொரு முயற்சி 1968 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டு கடிகாரம் ஒரு மணி நேரம் முன்நோக்கி மாற்றப்பட்டு, 1971 ஆம் ஆண்டு வரை அதில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை.
 
அதன் பின்னர் மீண்டும் ஆண்டுக்கு இரண்டு தடவைகள் நேரத்தை மாற்றும் நடைமுறை கொண்டுவரப்பட்டது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்