2,000 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட பச்சை மாணிக்கக் கல்!
9 பங்குனி 2016 புதன் 20:25 | பார்வைகள் : 10622
சீனாவில் 2,000 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட உடலுடன், பச்சை மாணிக்கக் கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்ஸி மாகாணத்தில் 2000 ஆண்டு பழமையான பச்சை மாணிக்கக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லை மார்க்குயிஸ் ஹைஹன் என்ற பேரரசர் அணிந்திருந்ததாக கண்டறியப்படடுள்ளது.
இந்த பேரரசர் ஹன் வம்சத்தைச் சேர்ந்தவர் என்றும், வெறும் 27 நாட்கள் மட்டும் பேரரசராக பதவி வகித்தவர் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு பகுதிகளில் தோண்டியெடுக்கப்பட்ட கலைப்பொருட்களின் கண்காட்சி ஒன்று மூன்று மாதங்கள் நடைபெறவுள்ள நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாணிக்கல்லும் இந்த கண்காட்சியில் வைக்கப்படும் என சீன தொல்பொருள் ஆய்வகத் துறை அறிவித்துள்ளது.