50000 ஆண்டுகளுக்கு முற்பட்ட அபூர்வ சிங்கம் கண்டுபிடிப்பு
16 மாசி 2016 செவ்வாய் 17:36 | பார்வைகள் : 10379
மரங்கள் மற்றும் சிகரங்களில் ஏறக்கூடிய அபூர்வ ஆற்றல் கொண்ட சிங்க இனம் பற்றி கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சிங்க இனம் இற்றைக்கு 50 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய கண்டத்தில் வாழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
'தயில்கொலியோ காணிபெக்ஸ்' என இந்த இனத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. கூறிய பற்களும் வலுவான தாடையும் உடைய இந்த சிங்க இனம் சுமார் 100 கிலோகிராம் நிறையுடையதாக கருதப்படுகிறது.
மேற்கு அவுஸ்திரேலியாவின் குகையொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சிங்கத்தின் உடல் எச்சங்களை ஆராய்ந்ததில் 'மர்ஸுபியல்' எனவும் அழைக்கப்படும் சிங்கத்தின் செயற்பாடுகள் தெரியவந்துள்ளது.
குறித்த சிங்கங்கள் தாவர உண்ணிகளாக இருந்ததுடன், சில சமயங்களில் மனிதர்களும் அவருக்கு இரையாகியிருக்கலாம் என கருதப்படுகிறது.