லீப் வருடம் என்றால் என்ன? பெப்ரவரி மாதத்திலுள்ள சிறப்புகள்
6 மாசி 2016 சனி 18:52 | பார்வைகள் : 10390
நாம் வாழும் பூமியானது தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரமும், தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றிவர 365¼ நாட்களும் எடுத்துக்கொள்கிறது. இதில், 24 மணி நேரத்தை ஒரு நாள் என்றும், 365 நாட்களை ஒரு ஆண்டு என்றும் நாம் கணக்கிடுகிறோம். அதே நேரத்தில், இதில் வரும் ¼ நாளை கணக்கில் சேர்த்துக்கொள்வதில்லை.
ஒரு ஆண்டில் வரும் 365 நாட்களை 12 மாதங்களாக (ஆங்கில மாதங்கள்) பிரித்து, ஜனவரி, மார்ச், மே, ஜூலை, ஆகஸ்டு, அக்டோபர், டிசம்பர் ஆகிய 7 மாதங்களுக்கு தலா 31 நாட்கள் வீதமும், ஏப்ரல், ஜூன், செப்டம்பர், நவம்பர் ஆகிய 4 மாதங்களுக்கு தலா 30 நாட்கள் வீதமும், பிப்ரவரி மாதம் 28 நாட்கள் என்றும் கணக்கிட்டு வருகிறோம்.
ஆனால், கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படாத ¼ நாள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு நாளாக, அதாவது ஒரு நாளாக சேர்ந்து விடுகிறது. எனவே, இந்த ஒரு நாளை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரி மாதத்துடன் சேர்த்து 29 நாளாக கணக்கிடப்படுகிறது. இதை ‘லீப்’ ஆண்டு என்று நாம் கூறி வருகிறோம்.
அந்த வகையில், இந்த வருடம் ‘லீப்’ ஆண்டாகும். எனவே, இந்த மாதம் (பிப்ரவரி) 29 நாட்கள் வருகிறது.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த மாதம் 29ம் திகி பிறக்கும் குழந்தைகள், தனது பிறந்தநாளை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் கொண்டாட முடியும். அதேபோல், அன்றைய தினம் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் தங்களது திருமண நாளை கொண்டாட முடியும்.