Paristamil Navigation Paristamil advert login

விமானங்களின் ஜன்னல்கள் ஏன் சதுரமாக உள்ளன?

விமானங்களின் ஜன்னல்கள் ஏன் சதுரமாக உள்ளன?

28 தை 2016 வியாழன் 05:00 | பார்வைகள் : 10377


 விமானங்களின் ஜன்னல் மட்டும் சதுரமாக இல்லாமல் ஏன் வட்டமாக இருக்கிறது என்று தெரியுமா?

 
1950க்குப் பிறகு அதிக பயணிகளை ஏற்றி செல்வதற்காகவும், வேகமாக செல்வதற்காகவும் பெரிய விமானங்கள் தயாரிக்கப்பட்டன. இங்கிலாந்தைச் சேர்ந்த டி ஹாவிலாண்ட் நிறுவனமும் இதுபோன்ற பெரிய விமானங்களை உற்பத்தி செய்தது. ஆனால் ஒரே வித்தியாசம், வட்டமான ஜன்னல்களுக்கு பதிலாக சதுர ஜன்னல்களை கொண்ட விமானங்களை அந்த நிறுவனம் தயாரித்தது.
 
1953-ல் அந்த நிறுவனத்தின் 2 விமானங்கள் வானில் உடைந்து விபத்துக்குள்ளானது. இதில் 53 பேர் பலியானார்கள். இந்த விபத்துக்கான சதுர ஜன்னல்களே காரணமாக இருந்துள்ளது.
 
ஜன்னலின் முனைப்பகுதி மற்ற இடங்களை விட வலு குறைந்ததாக இருக்கும். சதுர வடிவிலான ஒரு ஜன்னலில் 4 முனைகள் இருக்கும். பல சதுர ஜன்னல்களை கொண்ட ஒரு விமானம் வானில் பறந்துக்கொண்டிருக்கும் போது காற்றினால் ஏற்படும் அழுத்தம் காரணமாக உடைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே தான் விமானங்களின் ஜன்னல்கள் எப்போதும் வட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்