Paristamil Navigation Paristamil advert login

உலகின் மிகவும் பெரிய டைனோஸர் கண்டுபிடிப்பு

உலகின் மிகவும் பெரிய டைனோஸர் கண்டுபிடிப்பு

14 தை 2016 வியாழன் 23:41 | பார்வைகள் : 10265


 102 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் வாழ்ந்த 121 அடி நீளமான டைனோ ஸர் ஒன்றின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 
ஆர்ஜென்டீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த டைனோஸரானது உலகின் மிகப் பெரிய டைனோஸராக கருதப்படுகிறது.
 
மேற்­படி டைனோ­ஸரின் நிறை­யா­னது 70 மெற்றிக் தொன்­னாகும். இது 14 ஆபி­ரிக்க யானை­களின் நிறைக்குச் சம­னானதாகும்.
 
ஆர்­ஜென்­டீன பாலை­வனப் பிராந்­தி­ய­மான சுபட் மாகா­ணத்­தி­லுள்ள லா பிௌசா பண்­ணையில் இந்த டைனோ­ஸரின் 220 க்கு மேற்­பட்ட எலும்­பு­களும் 80 பற்­களும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.
 
 
அதில் தொடை எலும்பு மட்டும் 8 அடி நீள­மா­ன­தாகும். இந்­நி­லையில் இந்த டைனோஸர் எச்­சங்­களை ஆய்­வுக்­குட்­ப­டுத்­திய ஆய்­வா­ளர்கள் அவை ரைரானோஸர் வகை டைனோஸர் இனத்தைச் சேர்ந் தவை எனத் தெரி விக்கின்றனர்.
 
எனினும் ஆய்வாளர்கள் இந்த டைனோஸர் வகைக்கு இது வரை பெயர் எத னையும் சூட்ட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்