Paristamil Navigation Paristamil advert login

உப்பு நீரில் குளிக்கலாமா...?

உப்பு நீரில் குளிக்கலாமா...?

7 பங்குனி 2015 சனி 21:31 | பார்வைகள் : 11108


 உப்பு தண்ணீரில் குளிப்பதன் மூலம் பல உடல்நல பயன்கள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், உப்பு தண்ணீரில் தொடர்ச்சியாக குளித்து வந்தால், அது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல பயன்களை அளிக்கும். மெக்னீசியம், கால்சியம், புரோமைட், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற கனிமங்கள் உங்கள் சரும துளைகளுக்குள் உறிஞ்சப்படும்.

 
இது உங்கள் சருமத்தை சுத்தப்படுத்தி தூய்மையாக்கும். சாதாரண தண்ணீரில் குளிக்கும் போது உடலில் உள்ள கிருமி தொற்று நீங்குவதற்கு சாத்தியம் இல்லாமல் போகலாம். ஆனால் உப்பு தண்ணீரில் குளிக்கும் போது உடலில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் அதன் மூலம் உண்டாகும் தொற்றுகள் ஆகியவை பாதிப்பை ஏற்படுத்துவதை தவிர்க்கலாம்.
 
இளமையான தோற்றம்
 
உப்பு தண்ணீர் குளியலை தொடர்ந்து செய்து வந்தால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் தொய்வுகள் குறையும். இது சருமத்தை மென்மையாக்கும். இது சருமத்தை கொழுக்க வைத்து சரும நீர்ச்சத்தை சமநிலைப்படுத்தும்.
 
பாத தசைகளுக்கு பயன் அளிக்கும்
 
பாதங்களில் தசை தளர்ச்சி மற்றும் செருப்பால் கொப்புளங்கள் கூட ஏற்பட்டு, அதனால் நீங்கள் அவதிப்பட்டு வரலாம். உப்பு தண்ணீரில் குளித்தால், தசை வலியும் விறைப்பும் குறையும். மேலும் பாதத்தில் ஏற்படும் நாற்றத்தையும் போக்கும்.
 
சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்
 
உங்கள் சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருப்பது மிகவும் நல்லதாகும். உப்பு தண்ணீரில் உள்ள மெக்னீசியம் அந்த நீரை உங்கள் சருமத்துடன் இணைக்கும். இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து சரும அணுக்களின் வளர்ச்சியை மேம்படுத்தும்.
 
தசை வலி மற்றும் தசைப்பிடிப்பிற்கு சிகிச்சையளிக்கும்
 
உப்பு தண்ணீரில் குளித்து வந்தால் தசைப்பிடிப்பு தொடராமல் இருக்கும். மேலும் கீல்வாதம், சர்க்கரை நோய் மற்றும் விளையாடுவதால் ஏற்படும் காயங்களினால் உண்டாகும் தசை வலிகள் மற்றும் பிடிப்புகளுக்கு சிகிச்சை அளித்திடும்.
 
மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
 
உடல் ரீதியான ஆரோக்கியத்தை மேம்படுத்த உப்பு தண்ணீர் குளியல் உதவுவதை போல், மன ரீதியான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது. அழுத்தத்தை போக்கும் சிறந்த ஒன்றாக விளங்குகிறது உப்பு தண்ணீர் குளியல். உங்கள் மன அமைதி மற்றும் நிம்மதியையும் அவை மேம்படுத்தும்.
 
இறந்த சருமத்தை நீக்கும்
 
உங்கள் சருமத்தை உகந்த அளவில் ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஒரு வழி தான் இறந்த சருமத்தை நீக்குவது. பாஸ்பேட் போன்ற சில வகையான உப்பு தண்ணீர் குளியல் டிடர்ஜெண்ட் போன்ற எதிர்வினையை உண்டாக்கும். மரத்துப் போன சருமத்தை மென்மையாக்கவும், இறந்த சருமத்தை நீக்குவதிலும் இது உதவும்.
 
அசிடிட்டிக்கு சிகிச்சையளிக்கும்
 
இன்றைய பலரும் சந்திக்கும் பெரிய பிரச்சனை அசிடிட்டி. பக்க விளைவுகளை ஏற்படுத்தும் விலை உயர்ந்த மருந்துகளை நாடுவதை விட, உப்பு தண்ணீர் குளியலை தேர்ந்தெடுக்கலாம்.
 
சரும பாதுகாப்பு
 
சுத்தமான மற்றும் இயற்கையான வடிவத்தில் பயன்படுத்தும் போது, உப்பு தண்ணீர் குளியலில் அதிக கனிமங்களும், ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். இது உங்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்கும். உங்கள் சருமத்தை சுத்தப்படுத்தி தூய்மையாக்கும். இதனால் சருமம் ஆரோக்கியமாகவும் பிரகாசமாகவும் இருக்கும்.

நச்சுத்தன்மையை நீக்கும்
 
சருமத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உப்பு குளியல் உதவிடும். வெதுவெதுப்பான நீர் சரும துளைகளை திறக்கும். இதனால் கனிமங்கள் ஆழமாக உள்ளிறங்கி, மிக ஆழமாக சுத்தப்படுத்தும். இதனால் உங்கள் சருமம் இளமையுடன் காட்சியளிக்கும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்